ITR: உதவிக்கரம் நீள்கிறது; இனி வருமான வரி செலுத்த கவலைப்பட வேண்டாம்

புதிய வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலில் நீங்கள் இப்போது CA கள், ERI கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதியையும் சேர்க்கலாம். அது தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 11, 2021, 07:53 PM IST
  • இனி வருமான வரி செலுத்த கவலைப்பட வேண்டாம்
  • வருமான வரிபோர்ட்டலில் இப்போது CA , ERI அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை சேர்க்கலாம்
  • 'My CA Service' ஐப் பயன்படுத்தி சி.ஏவை சுலபமாக சேர்க்கலாம்
ITR: உதவிக்கரம் நீள்கிறது; இனி வருமான வரி செலுத்த கவலைப்பட வேண்டாம் title=

புதுடெல்லி: வரி செலுத்துவோருக்கு உதவி செய்வதற்காக வருமான வரித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருமான வரித்துறை கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு உதவி செய்யும் இந்த அறிக்கையின்படி, CA கள், ERI களிடம் இருந்து வருமான வரியை ஆன்லைனில் தாக்கல் செய்ய உதவியைப் பெறலாம்.  

புதிய வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலில் நீங்கள் இப்போது CA கள், ERI கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதியையும் சேர்க்கலாம். அது தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கடினமாக இருந்தால், கவலையடைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக சி.ஏவை அணுக வேண்டிய அவசியமும் இல்லை. வருமான வரித்துறையே உங்கள் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளது.

Also Read | வருமான வரியை தாக்கலுக்கு புதிய இணையதளம்; முக்கிய அம்சங்கள் பிற விபரம்

வரி செலுத்துவோருக்கான மின்-தாக்கல் போர்டல்

புதிய மின்-தாக்கல் போர்டல் (new e-filing portal) ஜூன் 7 அன்று வருமான வரித் துறையால் தொடங்கப்பட்டது. இந்த போர்ட்டலில், நீங்கள் இப்போது பட்டய கணக்காளர் (Chartered Accountant), ஈ-ரிட்டர்ன் இடைத்தரகர் (ERI) அல்லது ஐடிஆர் (ITR) தாக்கல் அல்லது பிற தொடர்புடைய சேவைகளில் உதவி பெற எந்த அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியையும் வரி செலுத்துவோர் சேர்க்கலாம். வருமான வரியை தாக்கல் செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் வரி செலுத்துவோருக்கு இது உதவும்.

CA கள், ERI கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் யார்?

CA கள், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (ICAI) உறுப்பினர்கள் ஆவார்கள். ERI கள் அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகர்கள், அவர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யலாம் மற்றும் வரி செலுத்துவோர் சார்பாக பிற செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம்.

புதிய மின்-தாக்கல் போர்ட்டலின் (new e-filing portal) படி, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்பது உங்கள் வருமான வரி தொடர்பான விவகாரங்களை ஒருவர் தானாக  கவனிக்க முடியாவிட்டால் அவரது சார்பில், அங்கீகாரம் பெற்று செயல்படக்கூடிய ஒரு நபர்.

Also Read | New I-T e-filing portal: பல அம்சங்கள் செயல்படவில்லை; பயனர்கள் அவதி

வரி செலுத்துவோருக்கு CA, ERI கிடைக்கும்

இ-ஃபைலிங் போர்ட்டலில் 'My CA Service' ஐப் பயன்படுத்தி சி.ஏ ஒருவரை சுலபமாக சேர்க்கலாம். அதேபோல் நியமிக்கப்பட்ட CA-வை அகற்றுவதும் எளிது.. இந்த பட்டய கணக்காளர்கள் மின்-தாக்கல் போர்ட்டலில், வரி தாக்கல் செய்ய முழுமையாக உதவுவார்கள்.  வருமான வரி செலுத்துவோரின் வசதியை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் ஜூன் மாதம்  7ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது.

வருமான வரித் துறையில் (Income Tax Department) மின்னணு முறையில் வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்ய முன்னதாக  www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் இருந்தது.  தற்போது புதிய இனையதளமான incometax.gov.in (www.incometax.gov.in) ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய இணைய தளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்வது மிகவும் எளிதாக இருக்கும் மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) கூறியிருந்தது.

ஆனால் புதிய இணைய தளத்டில் சில சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து, அவை சரி செய்யப்பட்டன. அதையடுத்து தற்போது வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது வருமான வரித் துறை.

Also Read | ITR: எளிதானது வருமான வரி தாக்கல், இனி மொபைல் செயலி மூலமே வேலை முடியும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News