கடந்த வியாழன் அன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி யூனியன் பட்ஜெட் 2018-19 தாக்கல் செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பட்ஜெட் ஆனது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டாகும். எனவே இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.


எனினும் இந்த பட்ஜெட் மீதான விமர்சணங்கள் பலராலும் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று Zee Media குழுமத்திற்கு ப்ரதியேக நேர்காணல் அளித்து வருகின்றார!


நேர்காணலின் அமைச்சரின் சில பதில்கள் (Highlights)...


  • மக்கள் பட்ஜெட்டினை ஏற்றுக் கொண்டுள்ளனர். அரசு கஜானாவில் முதல் உரிமை ஏழை மக்களுக்கே உள்ளது.

  • சம்பாதிக்கும் மக்கள் தங்கள் வரியினை சரியாக செலுத்தி வருகின்றனர். எனவே அவர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் பல திட்டங்களை பட்ஜெட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

  • அதேப்போல் முதியோருக்கும் இந்த பட்ஜெட் பயனளிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடத்தர மக்களின் நலனை பாதுகாக்க மட்டும் சுமார் 12000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • கிராம்புற மக்களின் வளர்ச்சி என்பது, அவர்கள் இருப்பிடத்தின் வளர்ச்சி ஆகும். எனவே அவர்களின் குடியிருப்பு பகதிகளை வளர்ச்சி பாரையில் கொண்டு செல்லும் வகையில் சாலை மேம்பாட்டது திட்டம் மற்றும் மின்சாரம் திட்டம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

  • மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வழக்கத்தைவிட அதிகமாகவே வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை மத்திய அரசு புகுத்திவருகிறது. என தெரிவித்துள்ளார்


மேலும் பல சுவாரசியமான பதில்களுடன் கிடைக்கப்பெற்ற நேர்காணலினை Zee Businesss தொலைக்காட்சியில்...