உத்தரப்பிரதேசத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரியில் முதன்மை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு மதுபான விடுதி மற்றும் மும்பை நீதிமன்ற தீ விபத்தினை தொடர்ந்து தற்போது, கோரக்பூர் மருத்துவ கல்லூரியில்  தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை சுமார் 11 மணியளவில் இந்த கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் தீ பிடித்து எரிவதாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.


சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த மூன்று தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இன்று காலை,மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பை தெற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் அருகே தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து,மும்பையில் ஷெஷன்ஸ் நீதிமன்றம் செயல்பட்டு வரும் கட்டிடத்தில்இன்று காலை சுமார் 7.14 மணியளவில் தீ விபத்து ஏற்ப்பட்டது குறிப்பிடதக்கது.