பெங்களூரு நகரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகங்கள் எரிந்து நாசமடைந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


 



 


 



 


பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ம் தேதி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்துகின்றன. இதில் 232 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 63 விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளையும், அங்குள்ள நவீனரக விமானங்களை பார்வையிடுவதற்காகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கண்காட்சிக்கு வருகின்றனர்.


இன்று காலை இங்குவந்த பிரபல பேட்மின்டன் வீராங்கணை பி.வி.சிந்து தேஜாஸ் போர் விமானத்தில் பறந்து சென்று பார்வையாளர்களை மகிழ்வித்தார்.


இந்நிலையில், இன்று பிற்பகல் கண்காட்சி வளாகத்தில் பார்வையாளர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் சுமார் 100 கார்கள் மற்றும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமடைந்தன.