இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையின் (ITBP) 5 ஜவான்கள் தங்களுக்குள் ஏற்பட்ட துப்பாக்கி சூடு காரணமாக பலியாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மற்றொருவர் சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பகுதியில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை இறந்தார் என்று காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.


"இந்த சம்பவம் நரியன்பூரில் உள்ள ITBP-யின் 45-வது பட்டாலியனின் கேதார்நார் முகாமில் நடந்துள்ளது" என இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பஸ்தார் வீச்சு) சுந்தர்ராஜ் பி தெரிவித்துள்ளார்.


ITBP ஜவான் தனது சேவை ஆயுதத்தால் தனது சகாக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் IG தெரிவித்துள்ளார்.


மேலும் "குற்றம் சாட்டப்பட்ட ஜவான் மற்ற ஜவான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்", எனவும் IG தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


இச்சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் PTI தெரிவிக்கின்றது. 


முன்னதாக சம்பவம் குறித்து தகவல் அறிந்து நாராயன்பூர் காவல் கண்காணிப்பாளர் மோஹித் கார்க் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் PTI தகவல்கள் தெரிவிக்கின்றது.


எனினும் ஜவான்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.