வங்க தேச துறைமுகம் வழியாக முதல் சரக்கு கப்பல்… புதிய வர்த்தக மையமாக மாறும் திரிபுரா…!!!
வடகிழக்கு மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்கும் முக்கிய பாதையாக சிக்கன் நெக் (Chicken Neck) என்று கூறப்படும் சிலிகுரி பாதை மட்டுமே இருந்தது.
திரிபுரா மாநிலம் மூன்று பக்கங்களிலும் பங்களாதேஷை எல்லையாகக் கொண்ட மாநிலம்.
வடகிழக்கு மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்கும் முக்கிய பாதையாக சிக்கன் நெக் (Chicken Neck) என்று கூறப்படும் சிலிகுரி பாதை மட்டுமே இருந்தது. இது 21 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மிக குறுகிய பாதையாகும். மலை பிரதேசத்தின் வழியாக செல்லும் இது மிக குறுகிய கடினமான பாதையாகும்.
இப்போது திரிபுரா(Tripura) மாநிலம் ஒரு புதிய வர்த்தக மையமாக உருவாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
நீர்வழிப் போக்குவதுடன் இந்தப் பகுதி இணைக்கப்பட்டால் இதனால், போக்குவரத்து செலவை வெகுவாக கட்டுப்படுத்தப்படும் என்பதோடு, போக்குவரத்து எளிதாகும். கரடுமுரடான பாதையை தவிர்த்து எளிதாக மிக விரைவாக இலக்கை சென்று அடையலாம் என்பதால், மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து இதற்கான முயற்சியை மேற்கொண்டன.
ALSO READ விமானத்தை பயன்படுத்திய முதல் மனிதன் இலங்கை வேந்தன் ராவணன்: இலங்கை அரசு
இதை அடுத்து, ஜூலை 16ஆம் தேதி, இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான கடல் போக்குவரத்தின், ஒரு முக்கிய மைல் கல்லாக இந்திய கப்பல் துறை இணை அமைச்சர் மன்குஷ் மாண்டவியா (Mansukh L. Mandaviya) கொல்கத்தாவில் இருந்து பங்களாதேஷ் சிட்டகாங் துறைமுகம் (Chittagong Port) வழியாக செல்லும் முதல் சரக்கு கப்பலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கொல்கத்தா துறைமுகத்திலிருந்து, அகர்தலா, அசாம் வழியாக பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்தை கடந்து அடுத்த இரண்டு நாட்களில் முதல் சரக்கு கப்பல் திரிபுராவை சென்றடைய உள்ளது.
ALSO READ | எல்லை பதற்றத்திற்கு இடையில் இந்திய-அமெரிக்க கடற்படைகள் அந்தமானில் பயிற்சி…!!!
திரிபுரா மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
இப்போது சரக்கு போக்குவரத்து எங்களுக்கு மிக எளிதானதாகவும் சிக்கனமானதாகவும் ஆகிவிட்டது என்று அங்குள்ள வர்த்தகர் கௌதம் பால் என்பவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
தற்போது வரை பங்களாதேஷ் சிட்டகாங் துறைமுகத்திலிருந்து திரிபுராவின் தலைநகரான அகர்தலாவிற்கு, சாலை வழியாக சரக்குகள் கொண்டு வரப்பட்டன.
இதைத் தவிர தெற்கு திரிபுராவின் ஃபேணி நதி மீது கட்டப்பட்ட ஒரு பாலம் பங்களாதேஷின் ராம்கட் உடன் இணைக்கிறது. இது சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான போக்குவரத்து மேலும் எளிதாகும்.
கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதன் காரணமாக திரிபுரா ஒரு வர்த்தக மையமாக உருவாகும் என்பதோடு, தென்கிழக்கு ஆசியாவின் இந்தியாவின் நுழைவு வாயிலாக திருபுரா இருக்கும் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
இந்தியாவிற்கும் பங்களாதேஷ் இருக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்திற்கு, நீர்வழி ரயில் சாலை ஆகிய போக்குவரத்துக்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புதிய கடல் பாதை இந்தியா-பங்களாதேஷ் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது
இதன் காரணமாக பிராந்தியத்தில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்து வேலைவாய்ப்புகளும் முதலீடுகளும் பெருகும் என்று நம்பப்படுகிறது.
கொரோனாவினால் நாடெங்கிலும் வர்த்தகம் முடங்கிய நிலையில், இந்த புதிய தொடக்கம், மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது