கடந்த சனவரி 23 ஆம் தேதி முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். பின்னர் "மிஷன் உத்தர பிரதேசம்" என்ற பிரசாரத்திலும் ஈடுபட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று தனது முதலாவது அரசியல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசினார். அதுவும் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணி மாநாட்டில் தொடங்கினார்.


மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்திக்கு தயாராகி வருகின்றனர். அந்தவகையில் இன்று காங்கிரஸ் சார்பில் குஜராத் காந்தி நகரில் தேர்தல் பிரசாரம் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட பிரியங்கா காந்தி உரையாற்றினார்.


அப்பொழுது அவர் கூறியதாவது: நான் முதல் முறையாக குஜராத் வந்துள்ளேன். நாட்டுக்காக விடுதலை அடைய காரணமான மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு முதலில் சென்றேன். அங்கு சென்றதும் என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. நாடு விடுதலை அடையவதற்காக எத்தனை தலைவர்கள் உயிர் துறந்தார்கள். அவர்கள் நமது நாட்டை அன்பாலும், ஒன்றுமையாலும், சகோதரத்துவத்தாலும் உருவாகினார்கள். 


நான் என் இதயத்தில் இருந்து பேச விரும்புகிறேன். ஒரு குடிமகனாக விழிப்புணர்வுடன் இருப்பதை விட பெரிய தேசபக்தி இருக்க முடியாது. உங்கள் விழிப்புணர்வு ஒரு ஆயுதம். உங்கள் ஓட்டும் ஒரு ஆயுதம். இந்த ஆயுதம் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. யாரையும் தாக்காது. யாரிடமும் பிரச்சனை ஏற்ப்படுத்தாது. 


ஆனால் இந்த ஆயுதம் உங்களை வலிமையாக்கும். தேர்தல் என்பது என்ன? அதில் யாரை தேர்ந்தேடுக்கப்போறேன்? என்று மனதில் இருந்து சிந்திக்க வேண்டும். உங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்போகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும். நீங்கள் எப்படி முன்னேற முடியும். இளைஞர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும். பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள். விவசாயிகளின் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று சிந்திக்க வேண்டும். இந்த தேர்தலில் நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.


உங்கள் முன்னால் நின்றுக்கொண்டு உங்களிடம் பெரிய பெரிய வாக்குறுதிகளை அளித்த அவர்களிடம் கேளுங்கள்... 2 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாக கூறினார்களே, அந்த வேலைவாய்ப்பு எங்கே? 15 லட்சம் உங்கள் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினார்களே, அந்த 15 லட்சம் எங்கே சென்றது? பெண்கள் பாதுகாப்பை பற்றிய பேசிய அவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக ஏன் பெண்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்தவில்லை. இப்படி சரியான கேள்விகளை அவர்களிடத்தில் கேளுங்கள்.


அடுத்த வரும் இரண்டு மாதங்களில் உங்களிடம் அவர்கள் பல வாக்குறுதிகளை அளிப்பார்கள். ஆனால் நீங்கள் சிந்தியுங்கள். உங்கள் உண்மையான தேசபக்தியை காட்டுங்கள். இது உங்கள் நாடு. நீங்கள் தான் இந்த நாட்டை உருவாக்கினீர்கள். நீங்கள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.


ஆனால் பாஜக அரசு நமது நாட்டை அழித்துவிட்டது. நமது மக்கள் நசுக்கப்படுகிறார்கள். எங்கே பார்த்தாலும் வன்மத்தையும், வெறுப்பையும் உமிழ்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டை காப்பாற்ற போராட வேண்டும். இந்த போராட்டம் மற்றொரு சுதந்திர போராட்டம் ஆகும். நாட்டை காப்பாற்றவும், நாட்டை முன்னேற்றவும், நாட்டின் வளர்ச்சிக்காவும் நான் இணைந்து பணியாற்ற வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.