திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. சவுமித்ரா கான், இன்று டெல்லையில் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் மேற்கு வங்க பாஜக தலைவர் முகல் ராய் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். பா.ஜனதாவில் இணையும் முன்பு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா-வை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்க விஷ்ணுபூர் தொகுதியில் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்டார். இவர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினாராகவும் இருந்துள்ளார். 


இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில், மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஒரு எம்.பி. பாஜகவில் இணைந்துருப்பது மம்தாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் மேற்கு வங்கத்தில் இது பி.ஜே.பி பலப்படுத்தியுள்ளது.