மும்பை:- ஒரே நாளில் ஓஹோ என கோடீஸ்வரரான பல கதைகளைக் கேட்டிருப்போம். அதேபோல இங்கு உண்மையிலேயே ஒருவர் ஒரே நாளில் மகா கோடீஸ்வரர் ஆகியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் டாரே. மீனவரான டாரே மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த 28ம் தேதி, முதல் முறையாக தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார். 


மீன்பிடிக்க சென்றவருக்கு முதல் நாளிலேயே காத்திருந்தது அதிர்ஷ்டம். ஆம், வலையில் மிக அதிக அளவிலான மீன்கள் சிக்கின. இதைக் கவனித்த சந்திரகாந்த், உடனடியாக வலையை இழுத்தார். அப்போது வலையில் சுமார் 150  மீன்கள் இருந்தன. அவருடன் சென்றவர்கள் அந்த மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஏனென்றால் அந்த மீன்கள் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும்,. 


ஆம், கோல் மீன் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களை கொண்டது. இது பல்வேறு நாடுகளில் மிகவும் விலை மதிப்புமிக்கது. 


இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. டாரே இந்த மீன்களுடன் கரை திரும்பியதும் அவை ஏலம் விடப்பட்டதில், சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 


இதனை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்து சென்றுள்ளனர். கோல் மீன்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு வகை கரும்புள்ளி குரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் புரோட்டோனிபியா டயாகாந்தஸ். 


இந்தோனேசியா தாய்லாந்து ஹாங்காங் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இதற்கு எக்கச்சக்க டிமெண்ட் உள்ளது.  மிகவும் விலை உயர்ந்த கடல் மீன்களில் ஒன்றாக இது கருதப்படுவதால் இந்த மீன் தங்க மீன் என்று வர்ணிக்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 


Android Link - https://bit.ly/3hDyh4G 


Apple Link - https://apple.co/3loQYeR