ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; 5 CRPF வீரர்கள் பலி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 CRPF வீரர்கள் உயிரிழந்தனர்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 CRPF வீரர்கள் உயிரிழந்தனர்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கே.பி சோக் பேருந்து நிலையம் உள்ள பகுதியில் CRPF வீரர்கள் சென்று கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த பயங்கரவாதிகள் அவர்கள் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் அல்-உமர் முஜாயிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 5 CRPF வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 5 CRPF வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த வீரர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக CRPF வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தியதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
காஷ்மீரில் CRPF வீரர்கள் பலியானதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபுர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது