இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டை உலகின் மிகப் பெரிய ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் கையகப்படுத்தியுள்ளது. இந்த கையகப்படுத்துதலின் மதிப்பு சுமார் 1,07,644 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2007-ம் ஆண்டு சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் என்பவர்களால் பிளிப்கார்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை இடம் பெங்களூரில் உள்ளது. 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட இ-காமர்ஸ் நிறுவனம் பிளிப்கார்ட் படிப்படியாக முன்னேறி, இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்தது. 


கடந்த இரண்டு வருடமாக வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க, அந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து முழு விவரங்கள வெளியாகியுள்ளன. தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ 1,07,644 கோடி 


இதன் மூலம் இந்தியாவில் வால்மார்ட் நிறுவனம் இ-காமர்ஸ் துறையில் களமிறங்குகிறது. இ-காமர்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் அமேசான் அமெரிக்காவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.