வாத்தியங்களுடன் வாக்காளர்களை மலர் தூவி வரவேற்பு!
உத்தர பிரதேசத்தில் வாக்குச்சாவடியில் பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களுக்கு வரவேற்பு.
உத்தர பிரதேசத்தில் வாக்குச்சாவடியில் பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களுக்கு வரவேற்பு.
நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கான முதற்க்கட்ட வாக்குபதிவு இன்று (ஏப்ரல் 11) தொடங்கியது. அதில் ஆந்திரா, தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், காஷ்மீர், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் என 18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு முதற்க்கட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது.
அதேபோல நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. அதில் ஆந்திரா(175) , சிக்கம்(32), அருணாச்சல பிரதேசம்(60) மூன்று மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக சட்டப்சபை தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசா மாநிலத்தை பொறுத்த வரை நான்கு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதில் இன்று 28 தொகுதிக்கு முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடக்கிறது.
2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குபதிவு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:- பீகார்(4), அசாம்(5), ஒடிசா(4), சிக்கிம்(1), திரிபுரா(1), காஷ்மீர்(2), ஆந்திரா (25), மணிப்பூர்(1), மிசோராம்(1), சட்டீஸ்கர்(1), மேகாலயா(2), நாகாலாந்து(1), மகாராஷ்ட்ரா(7), தெலங்கானா(17), மேற்கு வங்கம்(2), உத்தரபிரதேசம்(5), அருணாச்சல் பிரதேசம்(2) என 91 தொகுதிகளுக்கு வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மிகவும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதலே வரிசையில் நின்று மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதற்காக தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் உத்தர பிரதேச மாநிலம் பாக்பக் மாவட்டம், பராவ்த் நகரில் உள்ள பூத் எண் 126-ல் வாக்காளர்களை மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்றனர். வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் என்சிசி மாணவர்கள் நின்றுகொண்டு, பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றனர்.