Union Budget 2025 Latest News Updates: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை வரும் பிப். 1(சனிக்கிழமை) அன்று தாக்கல் செய்ய இருக்கிறார். இதன்மூலம் முன்னாள் பிரதமரும், நிதி அமைச்சருமான மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் உடைக்க உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கடந்த ஜூலையில் 2024-25 பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அடுத்த 6 மாதத்திற்குள் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் மீது கடும் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், தற்போது பட்ஜெட் தயாரிப்பின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை சம்பிரதாய நடைமுறையான அல்வா கிண்டும் நிகழ்வு நடக்கிறது. வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூடும் நிலையில், அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். 


நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் செலுத்தும் இந்த பட்ஜெட்டை தயாரிக்க, அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் யார் யார், பட்ஜெட் தயாரிப்பில் அவர்களுக்கு என்னென்ன பொறுப்பு என்பதை இங்கு சற்று விரிவாக காணலாம்.


மேலும் படிக்க | Union Budget 2025 | பழைய வரிக்கு Goodbye? புதிய வரிக்கு Welcome.. வருமான வரி விதிப்பில் மாற்றம் இருக்குமா?


துஹின் கந்த பாண்டே ஐஏஎஸ்


நிதி மற்றும் வருவாய் துறை செயலாளரான இவர் 1987 பேட்ச், ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். வரிச் சலுகைகளுக்கான எதிர்பார்ப்புகளை நிர்வகிக்கிறார். மேலும், வருவாய் திரட்டலுக்கும் இவரே பொறுப்பு. பட்ஜெட் தாக்கலுக்கு சில நாள்களுக்கு முன்னரே இவர் நியமிட்டிருக்கிறார். எனவே, 2025-26 பட்ஜெட்டில் வருமான வரி சட்டத்தில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் பொறுப்பும் இவர் கையில்தான் இருக்கும் என கூறப்படுகிறது.


அஜய் சேத்


இவர் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் ஆவார். இவரும் 1987 பேட்ச் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். நிதிநிலை அறிக்கையின் இறுதி வடிவத்தை தயாரிப்பதிலும், பெரும்பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை பராமரிப்பதிலும் இவர் முக்கிய பங்காற்றுகிறார். 


மேலும், மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்ய பட்ஜெட்டில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அப்பிடியிருக்க வளர்ச்சியையும், நிதி ஒருங்கிணைப்பையும் சமநிலைப்படுத்தும் பொறுப்பில் இவரே இருக்கிறார். இது கடினமான பணி எனலாம். எனவே, பட்ஜெட்டில் இவரது அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கும்.


மேலும் படிக்க | Budget 2025: மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் நீட்டிக்கப்படுமா? பட்ஜெட்டில் வருகிறதா அறிவிப்பு?


மனோஜ் கோவில் 


செலவினத் துறை செயலாளரான இவர், 1991 பேட்ச், மத்திய பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இதற்கு பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார். இந்த பட்ஜெட்டில் மானியங்கள், மத்திய நிதியுதவி திட்டங்கள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்வதும், அரசின் செலவினங்களின் தரத்தை மேம்படுத்துவதும் இவரின் கைகளில்தான் உள்ளது. 


அருணிஷ் சாவ்லா


இவர் தற்போது முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) மற்றும் பொது நிறுவனங்கள் துறை (DPE) ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.
1992 பேட்ச் பீகார் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், முன்னர் சுகாதார அமைச்சகத்தில் பணியாற்றினார். பட்ஜெட் தயாரிப்பில் அரசின் சொத்தை பணமாக்குதல், அரசின் பங்கு விற்பனையை விரைவுப்படுத்துதல் உள்ளிட்டவை இவர் பொறுப்பாகும்.


எம். நாகராஜு


நிதிச் சேவைகள் துறைச் செயலாளரான இவர் 1993 பேட்ச், திரிபுரா கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். நிலக்கரித் துறையின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. அதன்பின், நிதிச் சேவைகள் துறையில் (DFS) பணியாற்றியிருக்கிறார். 


நிதி சார்ந்த தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துதல், டிஜிட்டல் பேங்கிங் போன்றவற்றை மேம்படுத்துதல், வைப்புத்தொகையை திரட்டுதல், கடன் வழங்கும் வழிமுறை ஆகியவைக்கு இவர்தான் பொறுப்பாவார். 


அனந்த நாகேஸ்வரன்


தலைமை பொருளாதார ஆலோசகரான இவர் முன்னாள் ஐஐஎம் மாணவர் ஆவார். மேலும் இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக்கத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதிநேர உறுப்பினராகவும் இவர் முன்னர் பணியாற்றி இருக்கிறது. 


இவர் தலைமையிலான குழு பொருளாதார ஆய்வறிக்கையை தயாரித்து வருகிறது. தற்போது ரஷ்யா - உக்ரைன் போர், மேற்காசிய போர் பதற்றம் என உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் வேளையில், பொருளாதார வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுவதில் முக்கிய பங்காற்றும்.


மேலும் படிக்க | Budget 2025: இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை, பட்ஜெட்டில் வரப்போகும் மிகப்பெரிய அறிவிப்பு