Budget 2025: இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை, பட்ஜெட்டில் வரப்போகும் மிகப்பெரிய அறிவிப்பு

Union Budget 2025: மோடி அரசாங்கத்தின் நலத்திட்டங்களில் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் தொகை அதிகர்க்கபடும் என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இது நடந்தால், அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 28, 2025, 12:11 PM IST
  • APY திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 40.
  • ஓய்வூதியம் 1000 முதல் 5000 ஆயிரம் வரை கிடைக்கும்.
  • ஓய்வூதியம் மற்றும் வயதுக்கு ஏற்ப தவணை தீர்மானிக்கப்படுகிறது.
Budget 2025: இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை, பட்ஜெட்டில் வரப்போகும் மிகப்பெரிய அறிவிப்பு

Union Budget 2025: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்காக மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பலதரப்பட்ட மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைவரும் தங்கள் தேவைகள் பூர்த்து செய்யப்படும் என நம்புகிறார்கள்.

Add Zee News as a Preferred Source

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட்டில் குறிப்பாக முதியவர்கள், ஓய்வூதியதாரர்கள், பெண்கள் ஆகியோர் மீது அதிக கவனம் செலுத்தப்படக்கூடும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிகின்றன. குறிப்பாக மோடி அரசாங்கத்தின் நலத்திட்டங்களில் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் தொகை அதிகர்க்கபடும் என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இது நடந்தால், அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.

Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம்

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டமாகும். இது ஏழைகளுக்கும், அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கும் அவர்களின் வயதான காலத்தில் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 

தற்போது, ​​அடல் பென்ஷன் திட்டத்தில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உள்ளது. பயனாணிகள் அளிக்கும் பங்களிப்பை பொறுத்து அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தின் ஓய்வூதியத் தொகையின் வரம்பை அரசு இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Atal Pension Scheme: சிறிய முதலீட்டில் அதிக ஒய்வூதியம்

அடல் பென்ஷன் திட்டத்தில், நாள் ஒன்றுக்கு வெறும், ரூ.7 முதலீடு செய்தால், 60 வயதில், ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம். தற்போது, ​​அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எனினும், பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த இந்த ஓய்வூதியத் தொகையை இரட்டிப்பாக்கி அறிவிப்பார் என கூறப்படுகின்றது. அடல் ஓய்வூதியத் திட்டம் எதிர்காலத்துக்கான நிதி பாதுகாப்பையும் சமூகப் பாதுகாப்பையும் வழங்குகிறது. தற்போது, ​​ரூ.5,000 ஓய்வூதியத்திற்கு, 18 வயதிலிரிந்து ஒருவர் மாதத்திற்கு ரூ.210 டெபாசிட் செய்ய வேண்டும், அதாவது தினமும் ரூ.7 பங்களிப்பு செய்யப்படுகிறது.

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.5000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தும் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இது அறிவிக்கப்படலாம். 60 வயதிற்குப் பிறகு நாட்டின் நலிவடைந்த பிரிவினருக்கு நிதி உதவி வழங்குவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், அதிகபட்ச பங்களிப்பு 42 ஆண்டுகளுக்கும், குறைந்தபட்ச பங்களிப்பு 20 ஆண்டுகளுக்கும் செலுத்தப்பட வேண்டும். 

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் சில சிறப்பம்சங்களை பற்றி இங்கே காணலாம்:

- இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 40.
- ஓய்வூதியம் 1000 முதல் 5000 ஆயிரம் வரை.
- ஓய்வூதியம் மற்றும் வயதுக்கு ஏற்ப தவணை தீர்மானிக்கப்படுகிறது.
- தவணை மாதாந்திரம், காலாண்டு, அரை ஆண்டு அல்லது வருடாந்திரமாக இருக்கலாம்.
- சந்தாதாரரின் ஓய்வூதியம் தொடங்கிய பிறகு, அவர்/அவள் இறந்தால், ஓய்வூதியம் அவரது கணவர்/மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
- சந்தாதாரர் மற்றும் அவரது மனைவி/கணவர் (இருவரும்) இறந்தால், ஓய்வூதிய நிதியில் 60 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்பட்ட தொகை மொத்தமாக - நாமினியாக பரிந்துரைக்கப்பட்டவருக்குத் திருப்பித் தரப்படும்.
- ஓய்வூதியம் தொடங்குவதற்கு முன்பு, அதாவது 60 வயதுக்கு முன், பங்களிப்பாளர் இறந்துவிட்டால், மீதமுள்ள ஆண்டுகளுக்கு பங்களிப்பு செய்யும் வாய்ப்பு அவரது வாழ்க்கைத் துணைக்கு உண்டு. 
- அதாவது, பங்களிப்பாளரின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாழ்க்கைத் துணை 60 வயது வரை ஓய்வூதியத்தில் பங்களிப்பதன் மூலம் நன்மையைப் பெறலாம்.
- அல்லது, ஓய்வூதியத்திற்கு பங்களிக்காமல், ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட முழுத் தொகையையும் மொத்தமாக எடுத்துக்கொளலாம். 
- சந்தாதாரரும் அவரது மனைவியும் (இருவரும்) 60 வயதுக்கு முன் இறந்துவிட்டால், திரட்டப்பட்ட நிதி பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு வழங்கப்படும்.
- இதில், வட்டியுடன் சேர்த்து ரூ.1000 ஓய்வூதியம் செலுத்துபவருக்கு ரூ.170,000, ரூ.2000 ஓய்வூதியம் பெறுபவருக்கு ரூ.340,000, ரூ.3000 ஓய்வூதியம் பெறுபவருக்கு ரூ.510,000, ரூ.4000 ஓய்வூதியம் பெறுபவருக்கு ரூ.680,000 மற்றும் ரூ.5000 ஓய்வூதியம் பெறுபவருக்கு ரூ.850,000 கிடைக்கும்.
- பங்களிப்பாளர் வருடத்திற்கு ஒரு முறை, அதாவது மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என அப்படி வேண்டுமானாலும் பங்களிப்பு முறையை மாற்றலாம். 
- இந்த மாற்றத்தை ஏப்ரல் மாதத்தில் மட்டுமே செய்ய முடியும்.

மேலும் படிக்க | Budget 2025, Old Tax Regime vs New Tax Regime: முக்கிய மாற்றங்கள்.... எந்த வரி முறை அதிக பலனளிக்கும்?

மேலும் படிக்க | EPFO 3.0 விதிகள்: 7 கோடி+ EPF உறுப்பினர்களுக்கு இனி பல வேலைகள் எளிதாகும்.. முழு விபரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News