டெல்லியில் தொடரும் பனிமூட்டம்: 64 ரயில்கள் தாமதம்!
டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் காரணமாக ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு வருகிறது.
டெல்லியில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக ரயில்களின் வருகை தாமதமாகி உள்ளது.
டெல்லியில் காலை வேளையில் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக இன்று 64 ரயில்கள் தாமதமாகி உள்ளது. மேலும் ஆறு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் 24 ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.