உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.


அதை தொடர்ந்து, திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனை பொதுமக்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.



பின்னர், எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் எச் ராஜா பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்று தெரிவித்த ராஜா, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.


தமிழகம் முழுவதும் பரபரப்பாக உள்ள இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.