குஜராத் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்திலால் பானுஷலி இன்று காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சயாஜி நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில், புஜில் இருந்து அகமதாபாத்திற்கு பயணம் மேற்கொண்ட பானுஷலியை மர்ம நபர்கள் சுட்டுகொன்று தப்பிச் சென்றுள்ளனர் என ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


ரயில் பயணத்தின் போது காடாரியா மற்றும் சுர்பாரி இரயில் நிலையங்களுக்கு இடையே இவர் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும், அவரது மார்பு மற்றும் கண் பகுதிகளில் துப்பாக்கி தோட்டா பாய்ந்திருப்பதாகவும் காவல்துறையினரில் முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இறந்த ஜெயந்திலால் உடலை மீட்க குஜராத்தில் உள்ள மல்லிய ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் குறிப்பிட்ட ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலின் முதல் தர AC வகுப்பில் இறந்த ஜெயந்திலால் பயணித்ததாகவும், அவர் தங்கியிருந்த அரையிலேயே அவர் கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த ஆண்டு, பலியான பாஜக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டார். எனினும் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து பானுஷலி விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளது, பழி வாங்கும் நிகழ்வாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.