என் தந்தை போன்றவரை இழந்துவிட்டேன் -மோடி இரங்கல் வீடியோ!
முன்னாள் பிரதர் வாஜ்பாய் இழப்பிற்கு பிரதமர் மோடி வீடியோ மூலம் இரங்கல்...
முன்னாள் பிரதர் வாஜ்பாய் இழப்பிற்கு பிரதமர் மோடி வீடியோ மூலம் இரங்கல்...
பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உட்பட பல்வேறு கட்சி அமைப்பினர்களும் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது தந்தையை போலிருந்த வாஜ்பாய் அவர்களை நான் இழந்துவிட்டேன் எனவும் இறங்கல செய்தியையும் அதில் பதிவிட்டுள்ளார்.