முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் காலமானார்!
முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் இன்று காலமானார்!
முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் இன்று காலமானார்!
கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், சமதா கட்சியின் நிறுவனர் ஆவார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை மந்திரியாக பணியாற்றியவர். இவரது பதவிக்காலத்தில் தான் கார்கில் போர் நடைப்பெற்றது. போக்ரான் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்பதை வெளிப்படையாக ஆதரித்தவர் பெர்னாண்டஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தனி ஈழம் அமைய குரல் கொடுத்துள்ளார்.
1967-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற 4-ஆவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வானார். அதன் பின்னர் 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்ற தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பெர்னாண்டஸ் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து கடந்த 2010-ஆம் ஆண்டு வரை பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.