டெல்லி முன்னாள் முதல்வர் மதன்லால் குரானா மரணம்!
டெல்லி முன்னாள் முதல் அமைச்சர் மதன் லால் குரானா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
டெல்லி முன்னாள் முதல் அமைச்சர் மதன் லால் குரானா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
கடந்த 1993ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை டெல்லியில் முதல் அமைச்சராக இருந்தவர் மதன் லால் குரானா. இவருக்கு வயது 82. இவர் கடந்த 2004ம் ஆண்டு ராஜஸ்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக நெஞ்சு வலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று காலை மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், நேற்று இரவு அவர் மரணமடைந்து உள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த மாதம் மற்றொரு மகன் மரணமடைந்து உள்ளார்.