இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்!
தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய ஆணையராக ராஜிவ் குமார் நியமனம்!!
தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய ஆணையராக ராஜிவ் குமார் நியமனம்!!
இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவரது இடத்துக்கு இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யபட்டுள்ளார். கடந்த 2018 ஜனவரியில், இந்திய தேர்தல் ஆணையராக அசோக் லவாசா நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2022 வரை உள்ளது. இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவர் திவாகர் குப்தா இந்த மாதம் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, அந்த பதவிக்கு அசோக் லவாசா நிமிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா செய்தார். வரும் 31 ஆம் தேதி விடுவிக்கப்படுகிறார். இவர், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த மூத்த தேர்தல் ஆணையராக இருந்தவர். இதை தொடர்ந்து, அசோக் லவாசா இடத்துக்கு புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்கண்டை சேர்ந்த 1984 ஆம் ஆண்டு IAS அதிகாரியான ராஜீவ் குமார், மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிதி செயலாளராக நியமிக்கப்பட்டார், இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது பணி முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் நிதி சேர்க்கும் திட்டத்தின் முக்கிய துறைகளான, பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா மற்றும் முத்ரா கடன் திட்டம் போன்ற முக்கிய திட்டங்களில் அவர் சிறப்பாக பணியாற்றியதாக கூறப்பட்டவர்.
நிதிச் செயலாளராக ஓய்வு பெற்ற பின்னர், குமார் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொது நிறுவனத் தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக நியமிக்கப்பட்டார். PESB மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உயர்மட்ட ஆட்சேர்ப்புகளை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.