மேற்கு வங்க மாநில முன்னாள் பெண் ஐபிஎஸ் அதிகாரி பாரதி கோஷ், பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க மாநில பெண் காவல்துறை அதிகாரி பாரதி கோஷ் பணி உயர்வு மூலம் ஐபிஎஸ் அதிகாரி ஆனவர். இவர் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர்.


மேற்கு வங்கத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவந்த பாரதி கோஷ், கடந்த 2018ம் ஆண்டு ஓய்வுபெற்றார். இந்த நிலையில் நேற்று அவர் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.