ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபாவின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிப்பு
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவருமான மெஹபூபா முப்தி, பாஸ்போர்ட் அலுவலகம் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக ட்வீட் செய்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவருமான மெஹபூபா முப்தி, பாஸ்போர்ட் அலுவலகம் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பான தகவல், ஸ்ரீநகரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் வந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “ஜம்மு காஷ்மீர் குற்றப் புலனாய்வுத் துறை (CID) கூடுதல் ஆணையர் அனுப்பியுள்ள அறிக்கையில், பாஸ்போர்ட் வழங்குவதற்கு நாங்கள் பரிந்துரைக்கவில்லை ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் ,”பாஸ்போர்ட் அலுவலகம், சிஐடியின் அறிக்கையின் அடிப்படையில், எனக்கு பாஸ்போர்ட்டை வழங்க மறுத்துவிட்டது, இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஒரு முன்னாள் முதலமைச்சர், பாஸ்போர் வைத்திருப்பது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், ஒரு வலிமைமிக்க தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றால், ஆகஸ்ட் 2019 முதல் காஷ்மீரில் இயல்பு நிலை வந்துவிட்டது என்று கூறுவது இந்த நிலையில் தானா, “என்று அவர் பதிவு செய்துள்ளார்.
இந்தை விமர்சித்து உமர் அப்துல்லாவும் ட்வீட் செய்துள்ளார்:
பாஜக மெஹபூபா முப்தி கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த போது, நாட்டிற்கு அச்சுறுத்தலாக இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ALSO READ | சரத் பவாருடன் ரகசிய சந்திப்பு நடந்ததா; மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR