ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது ஊழல் வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மாநிலத்ததின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நிதியை வழங்கி வருகிறது. அப்படி கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக ரூ.112 கோடி வழங்கியது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். 


அப்பொழுது ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் பரூக் அப்துல்லா இருந்தார். கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இதுக்குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. 


பின்னர் அம்மாநிலத்தின் கிரிக்கெட் சங்கத்தின் தலைர் பரூக் அப்துல்லா, பொருளாளர் அகமது மிர்சா, பொதுச்செயலாளர் சலீம் கான், ஜே&கே வங்கி அதிகாரி அகமது மிஸ்கார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது. சுமார் ரூ.43.69 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியது. இதனையடுத்து இன்று இந்த நான்கு பேர் மீதும் ஸ்ரீநகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.