இந்திய முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக டெல்லி AIIMS தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் நேற்று முன்தினம் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் பரிந்துறையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது நலன் குறித்து சிறப்பு கவனம் ஏற்றுக்கொள்ள மருத்துவர் ரண்டீப் குலேரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மேற்பார்வையில் வாஜ்பாயி அவர்களுக்கு மருத்துவ கண்கானிப்பு நடைப்பெற்று வருகிறது.


இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கின்றது என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, முன்னதாக மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயி அவர்களை கண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.


அந்த வகையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர்.


நாட்டின் 11-வது பிரதமாரான அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் 1924-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் என்ற ஊரில் நடுத்தர் பிராமண குடும்பத்தில் பிறந்தார். 


திருமண வாழ்வில் நாட்டம் காட்டாத இவர் 50 வருட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1996-ஆம் ஆண்டு சிறுது காலமும், 1998-ஆம் ஆண்டில் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் இரண்டாவது முறை பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாட்டின் முன்னேற்றப் பாதை பல வழிகளில் சென்றது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றங்கள் பல கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.