புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக குற்றம் செய்த பஹ்ரைனின் முன்னாள் காவலரை கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை காவல் துறை புதன்கிழமை தெரிவித்தது. கைது செய்யப்பட்ட நபர் கேரளாவைச் சேர்ந்த 61 வயதான நசீர் அஹமத் இம்ரான் என்ற பிலக்கல் நசீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீசார் கூறுகையில், நசீர் இந்தியா வருவதற்கு முன்பு ஒன்பது ஆண்டுகள் பஹ்ரைனில் போலீஸ்காரராக பணிபுரிந்தார் என்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது


61 வயதான நசீர் அகமது இம்ரான் 14 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். நசீர் தனது மகனுக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவரது சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலையில், தொழில் ரீதியிலான கார் திருடனாக மாறினார். 2008ம் ஆண்டும் அசோக்நகர் போலீசார் நசீரை கைது செய்தனர். இருப்பினும் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.


மேலும் படிக்க | சிறுவயதில் பிரிந்த தந்தையை தேடிய மகள்; 24 மணிநேரத்தில் சேர்த்து வைத்த டிவிட்டர்!


போலீசார் மேற்கொண்ட கைது நடவடிக்கை


ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில், பைடரியன்புரா காவல் நிலையம், சர்வீஸ் சென்டரில் இருந்து எஸ்யூவியை திருடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஹைகிரவுண்ட் காவல் நிலைய எல்லையில் இருந்து நசீரிடம் இருந்து இரண்டு பைக்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.


போலி ஆவணங்கள் தயாரித்து கார் விற்பனை


விசாரணையில், மகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக இந்தக் குற்றத்தை செய்ததாக அவர் கூறினார். வாகனத்தை எடுத்துக்கொண்டு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தார். பெங்களூரு நகரம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை திருடும் பணியில் நசீர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணை தொடர்கிறது.


மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR