முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று..!!!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், முக்கிய நபர்கள், தலைவர்கள், நடிகர்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்காமல் பாதித்து வருகிறது.
அமித்ஷா, அமிதாப் பச்சன், கர்நாடக முதலமைச்சர் யதியூரப்பா, போன்ற முக்கிய நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த வரிசையில் இப்போது, முன்னால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் பிரணாப் முகர்ஜிக்கு, திங்களன்று நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில், முடிவு பாஸிவ்டிவ் என வந்துள்ளது.
தனக்கு கொரோனா தொற்று இருப்பதை தனது ட்வீட்டில் குறிப்பிட்டு, சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் வந்தவர்கள், சந்தித்தவர்கள், பரிசோதித்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"வேறோரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விஜயம் சென்ற போது, எனக்கு பரிசோதனை செய்ததில், இன்று COVID19 பாஸிடிவ் என வந்துள்ளது. கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் வந்தவர்கள், தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொள்ளவும். கோவிட் -19 க்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்று முகர்ஜி ட்வீட் செய்துள்ளார்.
அவரது ட்வீட்டிற்கு பதிலளித்த பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள், அவர் விரைவில் முணம்டைய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.