முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போதைய நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லாத காரணத்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.


முன்னதாக தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்கை தேர்ந்தெடுக்க திமுக-வின் உதவியை கேட்டது காங்கிரஸ். திமுக-வைப் பொறுத்தவரையில் 3 ராஜ்யசபா இடங்களில் ஒன்றை மதிமுக-வுக்கு அளித்துவிட்ட காரணத்தால், காங்கிரஸ் கோரிக்கை குறித்து பரிசீலித்து வந்தது.



ஆரம்பத்தில் பச்சை கொடி காட்டிய திமுக, திடீரென காங்கிரஸ் கோரிக்கைக்கு சிவப்பு கொடி காட்டியது. இதனால் காங்கிரஸ் மேலிடம் திமுக மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.


இந்நிலையில் தற்போது மன்மோகன்சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்யசபாவில் மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து மன்மோகன்சிங் விமர்சனங்களை முன்வைப்பார் என்பதை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.