தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரரான் அவர்களை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார்.


இதையடுத்து, தலைவர் பதவி மற்றும் பாஜக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார். 


ந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார்.


ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு ஆளுநராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். 


இந்த விழாவில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்றார். மேலும், தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகளான தமிழிசை சவுந்தரராஜன், பாஜக-வில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர. அவர் கடந்த 2014 முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தார். தற்போது அவரை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்னும் பெருமையினையும் அவர் பெற்றார்.