திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட ப. சிதம்பரம்; ஆதரவாளர்கள் போராட்டம்
முன்னால் மத்திய அமைச்சர் பசிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டார்.
புதுடெல்லி: ப. சிதம்பரத்தின் 15 நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிந்துள்ள நிலையில், அவர் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜார்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பு வழக்கறிஞர் மற்றும் ப.சிதம்பம் தரப்பு வழக்கறிஞர் ஆகியோரின் வாதங்களை கேட்ட நீதிபதி ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் வைக்க வேண்டும் எனக்கூறி உத்தரவு பிற்பித்தார்.
மேலும் ப.சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, அவருக்கு தனிசிறை ஒதுக்க வேண்டும் என்றும், சிறையில் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அடுத்து இசட் வகை பாதுகாப்புடன், கழிப்பறை கொண்ட தனி அறை சிதம்பரத்துக்கு வழங்கப்டும்.
சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, டெல்லி போலீசார் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு அவர் சிறை எண் 7 இல் அடைக்கப்பட உள்ளார்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் செப்டம்பர் 19 வரை வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.