ஹைதராபாத்: ரூ. 2.53 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!
ஹைதராபாத்தில் மதிப்பிழப்பு நோட்டுகளை பதுக்கிவைத்திருந்த குழுவினரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
ஹைதராபாத்தில் மதிப்பிழப்பு நோட்டுகளை பதுக்கிவைத்திருந்த குழுவினரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
ஹைதராபாத் மாநிலம் பாஹத்புரா பகுதியில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பதுக்கிவைத்திருந்த 4 பேர் கொண்ட கும்பளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து ரூ.2.53 கோடி மதிப்பிளான நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக இவர்வகளை பெரும் புள்ளிகள் பயன்படுத்திக்கொண்டனரா என விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த ஜன-17 ஆம் நாள் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500ரூ மற்றும் 1000 ரூ நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரினை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து குறைந்த தினங்களிலேயே மீண்டும் பழைய பணமதிப்பிழப்பு நோட்டுகள் பிடிபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!