அலகாபாத்தில் ரயில் மோதி 4 பேர் பலி!
உத்தரபிரதேச மாநிலம் அலாய்பாத் மாவட்டத்தில், நைனி சந்திப்பின் அருகே ரயில்வே தண்டவாலத்தைக் கடக்கும்போது ஒரு சிறுமி உள்பட் 4 பேர் புபனேஷ்வர்-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் அடிப்பட்டு இறந்தனர்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அலாய்பாத் மாவட்டத்தில், நைனி சந்திப்பின் அருகே ரயில்வே தண்டவாலத்தைக் கடக்கும்போது ஒரு சிறுமி உள்பட் 4 பேர் புபனேஷ்வர்-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் அடிப்பட்டு இறந்தனர்
காவல்துறை அறிக்கையின்படி இச்சம்பவம் விடியற்காலை 3.30 மணியளவில் நடைப்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அடிப்பட்டவர்கள் சுஷிலா தேவி(46), அவரது 15 வயது மகள் ஷீலு லதா, சுஷிலாவின் அண்ணி பிரிஜ்கலி(55) மற்றும் விஜய் குமார்(28) என தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவல்துறை அறிக்கையின்படி, இந்த நான்கு கிராமவாசிகளும் ரயில்வே தண்டவாளங்களை தாண்டி தங்கள் கிராமத்திற்குத் திரும்பிச் செல்லும் போது இந்த விபத்து நடைப்பெற்றுள்ளது.