மும்பை நடைமேம்பாலம் விபத்தை கேட்டு மிகவும் வருத்தமடைதேன். BMC ஆணையர் மற்றும் மும்பை காவல்துறை அதிகாரிகளுடன் மீட்பு பணி குறித்து கேட்டறிந்தேன். விரைவாக நிவாரண பணிகள் மற்றும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




மும்பை நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி சரிந்தது விழுந்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். 36 பேர் காயமடைந்துள்ளனர்


 




மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி சரிந்தது விழுந்ததில் இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்த இரண்டு பேரும் பெண்கள் எனக் தகவல்


 




மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (சி.எஸ்.டி) இரயில் நிலையம் அருகே இன்று(வியாழக்கிழமை) நடை மேம்பாலத்தின் ஒரு பகுதியை உடைந்ததால் சுமார் 23 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 


பாலத்தின் இடிந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிய உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களில் இருவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என மும்பை போலீசார் தெரிவித்தனர்.


 



இந்த மேம்பாலம் சிஎஸ்டி இரயில் நிலையத்தின் பிளாட்பாரம் 1 வடக்கு பி.டி. லேன் பகுதியை இணைகிறது. என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மும்பை போலீஸ் அதிகாரிகளும் உள்ளனர். 


இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தும்படி போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.