ஹம்பி தூண்களை உடைத்த இளைஞர்களுக்கு தலா ரூ. 70000 அபராதம்!
ஹம்பியில் உள்ள விஷ்ணு கோயிலின் தூண்களை உடைத்து சேதப்படுத்திய 4 இளைஞர்களுக்கு கர்நாடகா கோர்ட் தலா ரூ. 70000 அபராதம் விதித்துள்ளது.
ஹம்பியில் உள்ள விஷ்ணு கோயிலின் தூண்களை உடைத்து சேதப்படுத்திய 4 இளைஞர்களுக்கு கர்நாடகா கோர்ட் தலா ரூ. 70000 அபராதம் விதித்துள்ளது.
யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான ஹம்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள விஷ்ணு கோயிலின் தூண்களை சில இளைஞர்கள் எட்டி உதைத்து, அடித்து உடைத்தனர்.
விசாரணையில் அவர்கள் ஹம்பிக்கு சுற்றுலா வந்த ராஜ்பாபு, ராஜா, ராஜேஷ் சவுத்ரி மற்றும் ஆயுஷ் சாஹு ஆகியோர் என தெரியவந்தது. இதில் ராஜ்பாபுவும், ராஜேஷ் சவுத்ரியும் பிகாரைச் சேர்ந்தவர்கள். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் ஆயுஷ் சாஹூ பெங்களூருவைச் சேர்ந்தவர். மேலும் ராஜா என்பவர் பொறியியல் மாணவர்.
இவர்கள் நால்வரும் சேர்ந்து ஹம்பி விஷ்ணு கோவிலில் உள்ள தூண்களின் மீது ஏறி உள்ளனர். அத்துடன் அவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதில் ஆயுஷ் சாஹூ வீடியோ எடுக்க மற்றவர்கள் அந்த கோவில் தூண்களை உடைத்து அழித்துள்ளனர். வைரலான இந்த வீடியோ பதிவுடன் இந்திய தொல்லியல் ஆய்வகம் ஹம்பி காவல்துறையிடம் புகார் அளித்தது. இது குறித்து விசாரித்த காவல்துறையினர் நால்வரையும் கைது செய்து கர்நாடகா கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். வழக்கு பதிந்து விசாரணை நடத்திய கர்நாடகா கோர்ட் இவர்களுக்கு தலா ரூ.70000 அபராதம் விதித்தது.
இத்தொகையைக் கொண்டு தூண்களைச் சீரமைக்க இந்தியத் தொல்லியல் ஆய்வகம் முடிவு செய்தது. இந்நிலையில் தூண்கள் கீழே விழாமல் இருக்கவும் சேதமடையாமல் இருக்கும் வகையிலும் தூண்கள் அமைக்கப்பட உள்ளன.