பிரான்ஸ் நாட்டில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரான்ஸ் நாட்டில் ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ் என்ற பெயரில் அனில் அம்பானி ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனமானது 2007-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டு வரை 141 மில்லியன் யூரோ பணம் வரியாக செலுத்த வேண்டும் என பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. ஆனால், 7.6 மில்லியன் யூரோ மட்டுமே வரியாக தர முடியும் என்று அனில் அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது என அந்நாட்டு பத்திரிகை லி மாண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடன் பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் ஆனது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்து அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.