இலவச விமானப் பயணம்: மருத்துவர்கள், செவிலியர்களுக்கு Vistara அளிக்கும் அதிரடி சலுகை
நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இலவச விமான சேவையை வழங்குவதாக விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி: உள்நாட்டு விமான நிறுவனமான விஸ்தாரா ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இலவச விமான சேவையை வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் உஷா பதீக்கு எழுதிய கடிதத்தில், இந்த சலுகை குறித்த தகவல்களை நிறுவனம் அளித்துள்ளது.
கொரோனாவை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு
கொரோனா நெருக்கடி காலத்தில் இந்த முன்னணி வீரர்களுக்கு எங்களாலான வசதிகளை நாங்கள் செய்துகொடுப்போம் என இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பிறகு, உஷா பாதியும் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து இந்த கடிதத்தை ட்வீட் செய்து, "விஸ்தாரா, அரசு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் அவசர தேவையை பூர்த்தி செய்ய விமான தளவாட வசதியை வழங்க தயாராக உள்ளது. இது தவிர, கொரோனா தொற்றின் இந்த நெருக்கடியான சமயத்தில், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் (Doctors) மற்றும் செவிலியர்களுக்கு இலவச விமான பயணத்தையும் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அனைவரும் முழு முனைப்புடன் இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவோம்." என்று எழுதியுள்ளார்.
ALSO READ: தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க: டாக்டரின் வைரல் வீடியோ
'ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ்' சூத்திரம்
இந்த கடிதத்தில், விஸ்தாரா (Vistara) நிறுவனம், 'மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இலவசமாக அழைத்துச் செல்ல உதவ முடிந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்களது மருத்துவப் பணி நிறைவடைந்த பிறகு, அவர்களை மீண்டும் அவர்களது இடத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பையும் ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இருப்பினும், விமானத்தில் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகள் இருப்பதால், 'ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ்' அதாவது முதலில் வருபவர்களுக்கு முதலில் சலுகை என்ற அடிப்படையில் மருத்துவ நிபுணர்களுக்கு விமானத்தில் இடங்கள் வழங்கப்படும்" என்று கூறியுள்ளது.
இந்த நிறுவனங்களும் இலவச சேவைகளை அளிக்கின்றன
விஸ்தாராவைத் தவிர, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களும், கொரோனா (CoronaVirus) காலத்தில் சில முக்கிய சேவைகளை இலவசமாக அளிக்கின்றன. விமான டிக்கெட்டுகளில் நேரம் அல்லது தேதியை மாற்றுவதற்கு எந்த தொகையையும் வசூலிக்க வேண்டாம் என இந்த நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இண்டிகோவில் ஏப்ரல் 30 வரையிலும், ஸ்பைஸ்ஜெட்டில் மே 15 வரையிலும் புதிய முன்பதிவுகளில் மாற்றக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது.
ALSO READ: உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி அளித்தார் தலைமை நீதிபதி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR