ரூ.10 லட்சம் மூலதனம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் பெயரை இலவசமாக பதிவு செய்யும் திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு இலவச பெயர் பதிவு செய்யும் திட்டம் இன்று முதல் அறிமுகமானது.


இது குறித்து மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்க பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.10 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை கொண்ட எந்த நிறுவனமும் அதன் பெயரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என்றும், நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு குறியீட்டு எண் ஒதுக்கும் நடைமுறையும் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதற்காக ரன் என்ற இணையதள சேவை துவங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.