உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மனிஷ் மதேஷியா எனும் நபருக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் குழுமியிருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 இத்திருமணத்துக்கு மனிஷ் மதேஷியாவின் நண்பரான பாபு லால் யாதவ்வும் வந்துள்ளார். ராணுவத்தில் பணி செய்துவந்த பாபு லால் யாதவ், தனது நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சிறப்பு விடுமுறையில் வந்து கலந்துகொண்டிருக்கிறார். 


எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன. அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. மணமகனான மனிஷ் மதேஷியா திருமணச் சடங்கின் ஒரு பகுதியாக, துப்பாக்கியை எடுத்து மேல்நோக்கிச் சுட்டார். அப்போது எதிர்பாராவிதமாக, எதிரில் வெள்ளை நிற உடையுடன் நின்றுகொண்டிருந்த அவரது ராணுவ நண்பரான பாபு லால் யாதவ்வைப் பதம் பார்த்தது. 


குண்டு பாய்ந்ததால் துடித்தபடியே கீழே சுருண்டு விழுந்த பாபு லால் இச்சம்பவத்தில் உயிரிழந்தார். கோலாகலமாக ஆரம்பித்த திருமண விழா கடைசியில் பெரும் சோகத்தில் முடிந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், மணமகன் மனிஷ் மதேஷியாவைக் கைது செய்தனர். அத்துடன் அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். 


மேலும் படிக்க | மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு? - பாதியிலேயே வெளியேறிய முதலமைச்சர்?


 


இதில் சோகமான இன்னொரு விஷயம்-  திருமண விழாவில் மனிஷ் மதேஷியா பயன்படுத்திய அந்தத் துப்பாக்கியை அவரிடம் கொண்டுவந்து கொடுத்ததே, இறந்துபோன அந்த ராணுவ நண்பர்தானாம்.



எதிர்பாராவிதமாக நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.


மேலும் படிக்க | 'விக்ரம்' ஓவர்; கட்சிப் பக்கம் திரும்பினார் கமல்! - அடுத்த மாஸ்டர் பிளான் ஸ்டார்ட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR