2022-ம் ஆண்டு முதல், மும்பையில் இருந்து ஆமதாபாத் வரை புல்லட் ரயில்கள் தினமும் குறைந்தபட்சம் 70 பயணங்கள் செய்ய உள்ளது. நாட்டின் முதல் அதிவேக புல்லட் ரயில், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், மும்பை வரை இயக்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது.
ரூ.10,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டப் பணிகள், வரும் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறினால், மும்பையில் இருந்து 508-km  தொலைவில் உள்ள ஆமதாபாத் ஆமதாபாத் நகருக்கு 2 மணி நேரத்தில் சென்று விடலாம்.


இந்த புல்லட் ரயில், மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து ஆமதாபாதில் உள்ள சபர்மதி ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது. 


இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில்,


மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த புல்லட் ரயில் ஓட்டப்படும். மேலும் இதில் 10 பேட்டிகள் (coaches) அமைக்கபட்டு இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.