ராகுல் காந்திக்கு அமேதி வாக்காளர்கள் பாடம் கற்பித்துள்ளனர் -இரானி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி வாக்காளர்கள் பாடம் கற்பித்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி வாக்காளர்கள் பாடம் கற்பித்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் அமேதி பாராளுமன்ற தொகுதியில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் உள்ள பாரோலியா கிராமத்தில் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயி பிரதான் சுரேந்திரசிங் என்பவர் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்மிரிதி இரானி தெரிவிக்கையில்., "பாராளுமன்ற தேர்தலில் அமேதி வாக்காளர்கள் பெயருக்காக பணியாற்றுபவருக்கு தக்க பாடம் புகட்டி, உண்மையிலேயே செயலாற்றுபவரை வெற்றிபெறச் செய்துள்ளனர். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரை தோற்கடிப்பார் என்று யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்து ஒரு புரட்சியை ஏற்படுத்தியதற்காக அமேதி மக்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ராகுல் காந்தி இந்த தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்தது இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டு பேசினார்.
இச்சந்திப்பின் போது ஸ்மிரிதி இரானியுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இருந்தார். பின்னர் அந்த கிராமத்தில் இருந்து ஸ்மிரிதி இரானி திரும்பிச் சென்றபோது ஒரு பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வாகனம் இல்லாமல் காத்திருந்தது தெரியவந்தது. உடனே அவர் பெருந்தன்மையுடன் தனது வாகனத்துடன் வந்த ஆம்புலன்சில் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.