இந்தியாவின் பராக்கிரமத்தை கண்டு அஞ்சி லடாக்கில் பின் வாங்கும் சீனா...!!!
லடாக்கில் கால்வானில் இருந்து, சீன வீரர்களின் வாகனங்கள், கவச வாகனங்களுக்கு திரும்பிச் செல்கின்றன.
இந்தியாவின் (India) பராக்கிரமத்தை கண்டு சீனா பின்வாங்குகிறது. சீன துருப்புக்கள் லடாக்கில் 3 வது போஸ்டில் இருந்து திரும்பத் தொடங்கியுள்ளன.
லடாக்கில் (Ladakh) சீன துருப்புக்கள் பின்வாங்குவதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது கால்வானில் இருந்து, சீன வீரர்கள் வாகனங்கள், கவச வாகனங்களுக்கு திரும்பிச் செல்கின்றன.
ALSO READ | சீன எல்லை பிரச்சனைக்கு பின் முதல் முறையாக ராம் நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி...!!!
புதுடெல்லி ( New Delhi): கல்வான் (Galwan Valley) பகுதியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள வெற்றி இது. லடாக்கில் சீன துருப்புக்கள் பின்வாங்குவதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது. சீன (China) வீரர்கள் கால்வானில் இருந்து திரும்பி செல்கின்றனர். கவச வாகனங்களுக்கு திரும்பிச் செல்கின்றனர. சீன வீரர்கள் PLA PP 14 பகுதியில் இராணுவ கூடாரங்களை அகற்றுவதைக் காண முடிந்தது. சீன வீரர்கள் கல்வான், ஹாட்ஸ்பெரிங் மற்றும் கோக்ரா ஆகிய பகுதிகளில் திரும்பி வருவதைக் காண முடிந்தது. ஆனால், சீனா படையினர் எத்தனை கி.மீ பின்வாங்கினர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சீன ( China) படையினர் கல்வான் (Galwan Valley), ஹாட்ஸ்பெரிங், கோக்ரா ஆகிய மூன்று போஸ்டகளில் இருந்து திரும்பி செல்லும் நிலையில், அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானது. கடந்த இரண்டு மாதங்களாக, இரு நாடுகளின் படைகளும் நேருக்கு நேர் நின்று எதிர்த்து வருகின்றன. சீனா தனது துருப்புக்களை திரும்பப் பெறுவது குறித்த பிரச்சினையை இந்தியா இப்போது உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சீன வீரர்கள் இன்னும் பாங்கோங்கில் இருக்கிறார்கள். சீன வீரர்கள் ஃபிங்கர் 8 பகுதியில் இருந்து பின் வாங்க வேண்டும் என இந்தியா தெளிவாக கூறி வருகிறது.
ALSO READ | ரஷியாவின் Vladivostok நிறுவக கொண்டாட்டத்தால் சீனா எரிச்சல்... காரணம் என்ன...
LAC பகுதி குறித்த இந்தியாவின் (India) உறுதியான நிலைப்பாட்டிற்கு சீனா அடிபணிந்துள்ளது என கூறலாம். கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து இருந்து சீன துருப்புக்கள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன என்பது இந்தியாவை பெறுத்தவரை மிகவும் வெற்றிகரமான விஷயம் ஆகும். அதாவது கல்வானில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. LAC பகுதியில், சீனாவின் இராணுவம் தனது கூடாரங்களை அகற்றுவதைக் காண முடிந்தது, அதாவது சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இந்தியா வென்றது.