கர்நாடக மாநிலம் கலாபுராகியைச் சேர்ந்த இளைஞர் சுபாஷ் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்து MBBS முடித்து மருத்துவராகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஃப்சல்புர் தாலுகா, போசாகா கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சுபாஷ் துகாராம் பட்டீல். இவர் பெங்களூருவில் கடந்த 1997 ஆம் ஆண்டு MBBS படிப்பில் சேர்ந்தார்.  படிக்கும் போது, அவர் இருந்த பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அஷோக்கின் மனைவி பத்மாவதிக்கும் சுபாஷுக்கும் தவறான உறவு ஏற்பட்டது. இதில், அஷோக்கை சுட்டுக் கொன்றுவிட்டு, சுபாஷ் சிறைக்குச் சென்றார்.


இந்த குற்றத்துக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு சுபாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அந்நேரத்தில் அவர் MBBS இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்தார்.


சிறையில் இருந்தபோது, சிறைத் துறை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார் சுபாஷ். ஆயுள் தண்டனை முடித்துவிட்டு, 2016 ஆம் ஆண்டு வெளியே வந்த சுபாஷ், ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து MBBS படிக்க அனுமதி பெற்று 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் MBBS படித்து முடித்தார். சிறையில் இருந்த போதே, சுபாஷ் எம்ஏ ஜர்னலிசமும் படித்து முடிந்தார்.