ரம்ஜான் முதல் யோகா வரை- மன் கி பாத் நிகழச்சியில் மோடியின் உரை
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார்
அந்த வகையில் இன்று அவர் ரேடியோவில் பேசியதாவது:-
இன்று ரமலான் நோன்பு தொடங்கும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
சுதந்திர போராட்டத்தின் போது இந்தியாவுக்காக இளைஞர்கள் தூக்கு தண்டனையை ஏற்று கொண்டனர். சுதந்திர போராட்ட வீரர்கள் எவ்வாறு துன்பப்பட்டனர் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரமலானின் புனிதமான மாதம் பிறந்திருக்கும் இந்த வேளையில், நான் பாரதத்திலும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படும் யோகா தினம் ஜூன் 21-ம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. பிரிவினைவாதிகள் தலைதூக்கி வரும் நேரத்தில், இந்தியா உலகிற்கு வழங்கிய சிறந்த பரிசாக யோகா உள்ளது.
யோகம் என்பது எப்படி உடல், மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றை இணைக்கிறதோ, அதே போல யோகத்தால் உலகையும் இணைக்க இயலும்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நமது ஜனநாயகத்தை வலுவாக்குகிறது. மக்கள் தங்கள் பணிகளை விரிவாக மதிப்பீடு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.