நாட்டை உலுக்கிய ₹13,500 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடியில், முக்கிய குற்றவாளியான மெகுல் சோக்ஸி (Mehul Choksi), இந்தியாவிலிருந்து தப்பியோடி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார்.  2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி தனது குடும்பத்தினருடன் தப்பி சென்றார். இவர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியின் நெருங்கிய உறவினரும் ஆவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீதாஞ்சலி குழுமம் என்னும் நகை நிறுவனத்தின் உரிமையாளரான மெகுல் சோக்ஸி, கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை பெற்றார். 


இந்நிலையில், நிரவ் மோடியின் நெருங்கிய உறவினர், மெகுல் சோக்ஸியை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விசாரணை நடவடிக்கையை ஆன்டிகுவா போலீஸார் தொடக்கியுள்ளனர்.


ALSO READ | "toolkit" விவகாரம்; ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் தில்லி போலீஸார் சோதனை


மெகுல் சோக்ஸி காணவில்லை என்ற தகவல் வெளியானதிலிருந்து அவரின் குடும்பத்தினர் கவலையில் உள்ளதாகவும், இது தொடர்பாக ஆன்டிகுவா போலீஸார் விசாரித்து வருகின்றனர் என மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞரான அகர்வால் கூறினார். சோக்ஸியின் பாதுகாப்பு மற்றும் உடல்நிலை குறித்து குடும்பத்தினர் கவலையில் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


கடந்த 23 ஆம்தேதி ஜாலி ஹார்பருக்கு மெகுல் சோக்ஸி சென்றதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்போதிருந்து மெகுல் சோக்ஸியைக் காணவில்லை. இந்த தகவலை மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞரும் விஜய் அகர்வாலும் உறுதி செய்துள்ளார்.


பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், மற்றொரு முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியை (Nirav Modi), விசாரணைக்காக நாடு திருப்பி அழைத்து வர  இந்தியாவின் முயற்சி தொடர்பான, முக்கிய நடவடிக்கையாக, கடந்த ஏப்ரல் 16ம் தேதி அன்று நிரவ் மோடியை, விசாரணைக்காக இந்தியாவிற்கு நாடு திருப்பி அழைத்து வர, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

வைர வியாபாரி நீரவ் மோடி, 2018-ம் ஆண்டில் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். லாவோசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு, சென்ற நிரவ் மோடி (Nirav Modi), அங்கிருந்து இந்தியா திரும்பிவில்லை. கடந்த மார்ச் மாதம்  லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை லண்டன் போலீசார் கைது செய்தனர். 


ALSO READ  | PNB case: நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR