பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் கரியா முண்டா, மலையேறும் வீரர் பச்சேந்திரி பால், மக்களவை எம்.பி நாராயண் யாதவ் உள்ளிட்ட 14 பேருக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.


அதே வேலையில் தமிழகத்தை சேர்ந்த இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, நடிகர் பிரபுதேவா, பாடகர் ஷங்கர் மகாதேவன், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், மருத்துவர் ராமசாமி வெங்கடசுவாமி, சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட 93 பேருக்கு பத்மஸ்ரீ விருதும், வெளிநாட்டை சேர்ந்த டீஜன்பாய், இஸ்மாயில் ஓமர், அனில்பாய், பல்வந்த் மோரேஷ்வர் ஆகிய 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.