புதிய பார்லிமென்ட் திறப்பு விழா: புது டெல்லி சன்சாத் மார்க்கில் ஞாயிற்றுக்கிழமை (மே 28 , 2023) அன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழா ஒரு முக்கியமான தருணம். நாடே கொண்டாடிய வேண்டிய ஒரு விசியம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக பத்தொன்பது எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாட்டின் முதல் குடிமகனாக கவுரவிக்கப்படும் குடியரசு தலைவர் முர்முவை முற்றிலுமாக புறக்கணித்து புதிய பார்லிமென்ட் கட்டிடத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு நமது ஜனநாயகத்தின் மீதான பெரிய அவமானம் மட்டுமல்ல, நேரடியான தாக்குதலும் கூட என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. "இது தகுதியற்ற செயல்" என்றும், "நாட்டின் உயரிய பதவியை அவமதிப்பதாகவும், அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாகவும் எனவும் குற்றசாட்டி உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது அரசியலமைப்புபடி முன்னுரிமை வரிசையில் இந்தியக் குடியரசுத் தலைவர் முதலாவதாகவும், இரண்டாவதாக இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வருவார், அதன்பிறகு மூன்றாவதாக தான் பிரதமர் வருவார். அப்படி இருக்கையில், புதிய நாடளுமன்றக் கட்டிடத்தை நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் திறந்து வைப்பது தான் முறை. ஆனால் அதையெல்லாம் மோடி அரசு கண்டுக்கொள்வதில்லை எனவும், 2014க்குப் பிறகு உருவான புதிய இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நாங்கள் செய்வது தான் சரி என மோடி ஆட்சியில் அனைத்துப் பணிகளையும் நியாயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மேலும் படிக்க - புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!


புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகளின் பட்டியல்:


பாரதிய ஜனதா கட்சி (BJP)  - ஜே.பி நட்டா


சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) - ஏக்நாத் ஷிண்டே


தேசிய மக்கள் கட்சி (NPP) - கான்ராட் சங்மா


தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) - சிங்வாங் கொன்யாக்


சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) - பிரேம் சிங் தமாங்


ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (RLJP) - சிராக் குமார் பாஸ்வான்


அப்னா தள் (சோனிலால்) - அனுப்ரியா பட்டேல்


இந்திய குடியரசுக் கட்சி (RPI) - ராம்தாஸ் அத்வாலே


தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) - ஜி.கே.வாசன்


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) - எடப்பாடி கே.பழனிசாமி


அகில ஜார்கண்ட் மாணவர் சங்கம் (AJSU) - சுதேஷ் மஹ்தோ


மிசோ தேசிய முன்னணி (MNF) - ஜோரம்தங்கா


யுவஜன ஸ்ராமிக்க விவசாயி காங்கிரஸ் கட்சி (YSRCP) - ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி


தெலுங்கு தேசம் கட்சி (TDP) - என். சந்திரபாபு நாயுடு


சிரோமணி அகாலி தளம் (SAD) - சுக்பீர் சிங் பாதல்


பிஜு ஜனதா தளம் (BJD) - நவீன் பட்நாயக்


மேலும் படிக்க - புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது: ஜெகன் ரெட்டி


புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல்:


இந்திய தேசிய காங்கிரஸ் (INC) - மல்லிகார்ஜுன் கார்கே


திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) - மு.க.ஸ்டாலின்


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) - வைகோ


விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) - தொல். திருமாவளவன்


திரிணாமுல் காங்கிரஸ் (TMC) - மம்தா பானர்ஜி


ஐக்கிய ஜனதா தளம் (JD) - லலன் சிங்


ஆம் ஆத்மி கட்சி (AAP) - அரவிந்த் கெஜ்ரிவால்


தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) - சரத் பவார்


சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - தபன் குமார் சென்


சமாஜ்வாதி கட்சி (SP) - அகிலேஷ் யாதவ்


ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) - லாலு பிரசாத் யாதவ்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) - டி.ராஜா


ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) - ஷிபு சோரன்


கேரள காங்கிரஸ் (எம்) - ஜோஸ் கே மணி


புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) - மனோஜ் பட்டாச்சார்யா


ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) - ஜெயந்த் சிங்


பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகிய இரு அரசியல் கட்சிகளும் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை.


மேலும் படிக்க - புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா... 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ