கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை பாடாய் படுத்தி வந்த நிலையில், தற்போது இதன் வீரியம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி (Corona Vaccination) போட்டுக் கொண்டவர்களுக்கு உள்நாட்டு விமான பயணத்தில் தளர்வுகள் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் பயணம் மேற்கொள்ள கொரோனா நெகட்டிவ் (Corona Negative) சான்றிதழ் கட்டாயமாக உள்ள நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நெகட்டிவ் சான்று தேவையில்லை என்ற முடிவை மாநில அரசுகளுடன் ஆலோசித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது. 


ALSO READ | New Disease Found: பிறந்த குழந்தைக்கு புதுவித நோய், அதிர்ச்சியில் மருத்துவர்கள்


முன்னதாக ஒடிசா, மராட்டியம், மேகாலயா போன்ற மாநிலங்கள், தங்கள் மாநிலத்துக்கு விமானத்தில் வருபவர்கள், கொரோனா இல்லை என்பதற்கான ‘நெகட்டிவ்’ சான்றிதழுடன்தான் வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளன. பயணத்துக்கு முந்தைய 72 மணி நேரத்துக்குள் இந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளன. இதனால், உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை குறைந்து, தங்களது வருவாய் பாதிக்கப்படுவதாக மத்திய அரசிடம் விமான நிறுவனங்கள் முறையிட்டன.


எனவே 2 தவணை தடுப்பூசி போட்டவர்களை, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமலே உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய அனுமதிப்பது மக்களிடை சற்று நிம்மதியை ஏற்படுத்தும்.


ALSO READ | AIDS பாதித்த பெண்ணுக்கு 6 மாதங்களாக கோவிட், என்ன நடந்தது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR