Vatican City, Vatican: பிரதமர் நரேந்திர மோடி தனது இத்தாலி சுற்றுப்பயணமாக வாடிகன் சிட்டி சென்றடைந்தார். அங்கு போப் பிரான்சிஸை சந்தித்தார். 20 நிமிடங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்ட இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் மற்றும் வறுமையை நீக்குதல் போன்ற உலக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பரந்த விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பிரதமர்  நரேந்திர மொடியும் போப்பாண்டவரும் விவாதித்தார்கள்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜி-20 இன் 16வது உச்சிமாநாடு இத்தாலியில் நடைபெறும் நிலையில், இந்தப் பயணத்தில் அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்


ஜி-20 மாநாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரம் மற்றும் சுகாதாரத் துறையை மீண்டும் பாதையில் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, இத்தாலி சென்றுள்ளா பிரதமர் நரேந்திர மோடிக்கு, இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி அவருக்கு ரோமில் பிரமாண்ட வரவேற்பு அளித்தார்.


ALSO READ | இந்தியா -இத்தாலி பிரதமர்கள் அதிகாரபூர்வ சந்திப்பு


பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது, வேறு பல உலக தலைவர்களை சந்திக்கும் திட்டமும் உள்ளது. உலகில் அமைதியை நிலைநாட்டுதல், பல்வேறு மதத்தினரிடையே சமூக நல்லிணக்கம் அதிகரிப்பது போன்ற விஷயங்கள் குறித்து உலக தலைவர்களுடன் விவாதிக்கிறார். பிரான்ஸ் மற்றும் இந்தோனேசியா அதிபர்கள், சிங்கப்பூர் பிரதமர் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். இதன் பின்னர், உலக தலைவர்களுக்கும் இத்தாலி பிரதமர் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்திலும் கலந்து கொள்ள உள்ளார்.


இத்தாலிக்குப் பிறகு பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பின் பேரில் அவர் நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் இங்கிலாந்தின் கிளாஸ்கோவுக்குச் செல்கிறார். அங்கு இரு தலைவர்களும், இந்தியாவிற்கும் பிரிட்டனிற்கு இடையிலான உறவை மேம்படுத்துவது பற்றி பேசுவார்கள். 


ALSO READ: புனித் ராஜ்குமார் மறைவிற்கு அஜித் இரங்கல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR