புனித் ராஜ்குமார் மறைவிற்கு அஜித் இரங்கல்!

நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி இரங்கல் தெரிவித்துள்ளனர்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2021, 08:06 PM IST
புனித் ராஜ்குமார் மறைவிற்கு அஜித் இரங்கல்! title=

பெங்களூரு: கன்னட பவர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் எதிர்பாராத திடீர் மரணம் ஒட்டு மொத்தத் திரைத்துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் பிறந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட நடிகரான ராஜ்குமாரின் ஐந்தாவது மகன் ஆவார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் தொலைக்காட்சி பிரபலம் என பல முகங்களை கொண்டிருந்தார் புனித் . பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002-ம் ஆண்டு வெளியான 'அப்பு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஃபிலிம் ஃபேர் விருது, சைமா விருது, கர்நாடக மாநில அரசின் விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் புனித். உடல் ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட புனித் உடற் பயிற்சி செய்வதிலும் பேரார்வம் கொண்டவர்.   கன்னட திரையுலகின் பவர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் காலையில் வழக்கம் போல் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக ,திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

punith

ஆனாலும் புனித் ராஜ்குமார் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருந்தது. இவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடியும், சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமாரின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.  இந்த துயர சம்பவம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்தனர். இதனையடுத்து,அவரது மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி ,தமிழக முதல்வர் ஸ்டாலின்,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் புனீத் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  "புனீத் ராஜ்குமார் அவர்களின் மரண சேதி கேட்டது எனக்கு மிகுந்த துயரத்தை அளித்தது. இந்த மீளா  துயரத்திலிருந்து இவரது குடும்பம் சீக்கிரம் மீண்டு வர வேண்டும்" என கூறியுள்ளார். இதனை நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  மேலும் நடிகர் புனீத் ராஜ்குமார் மரண அறிவிப்பு உறுதி செய்யப்பட்டதும்.அதனை நேரலையில் செய்தியாக வாசித்த செய்தி வாசிப்பாளர் ஒருவர் கண்கலங்கி, கதறியழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ கதறும் ரசிகர்கள்! கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News