ஜி20: கறுப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை -மோடி
ஜி-20 மாநாட்டின் 2-வது நாளான இன்று "செயல்திறன், உலக சுற்றுசூழல் திறன் மற்றும் நிதி ஆளுமை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் கறுப்பு பணத்திற்கு எதிராக இந்திய பிரதமர் மோடி பேசியாதாவது:- வெகுகாலமாக தாமதிக்கப்பட்டு வரும் 15-வது ஒதுக்கீடுகள் தொடர்பான பொது விதிகள் குறித்த பொதுக் கூட்டத்தை 2017-ம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். சர்வதேச நாணய நிதியகம், பிராந்திய நிதி ஏற்பாடுகள் மற்றும் இருதரப்பு இடமாற்று ஏற்பாடுகள் தொடர்பாக குறிப்பிட்ட கால இடைவெளியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
ஊழலுக்கு எதிரான போராட்டம், கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு ஆகியன திறனுள்ள நிதி ஆளுமையை ஏற்படுத்தும். பி.இ.பி.எஸ். பரிந்துரைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். 2017 - 2018-ம் ஆண்டில் நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.